ஸ்பைடர்-மெர்சல் வில்லன் ரோல்களின் வித்தியாசம்: எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
- IndiaGlitz, [Thursday,September 28 2017]
இயக்குனர் மற்றும் ஹீரோவாக இதுவரை கோலிவுட் திரையுலகில் வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படம் மூலம் வில்லனாகி உள்ளார். 'ஸ்பைடர்' படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வந்தாலும் அனைத்து ஊடகங்களும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றன. எனவே எஸ்.ஜே.சூர்யா இனி முழுநேர வில்லன் நடிகராக மாறக்கூட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்திலும் அவர் வில்லனாக நடித்துள்ளார். இந்த இரு படங்களின் வில்லன் ரோல்கள் குறித்து சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா கூறியபோது, 'ஸ்பைடர் படத்தில் எனக்கு டார்க் வில்லன் ரோல், ஆனால் மெர்சல்' படத்தில் எனக்கு கிளாசிக் வில்லன் ரோல். இந்த படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்களை கொடுத்த இயக்குனர் அட்லி, மூவருக்கும் சேர்த்து ஒரே வில்லன் கேரக்டராக எனக்கு கொடுத்துள்ளார்' என்று கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் இந்த பேட்டியில் இருந்து விஜய்க்கு மூன்று வேடம் என்பது 100% உறுதியானது மட்டுமின்றி மூவருக்கும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒருவர் மட்டுமே இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.