'விஜய் 59' டைட்டில் - ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி. அட்லி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய், எமி ஜாக்சன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியது. ஆனால் ஒருசில காரணங்களால் டைட்டில் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் மற்றும் டைட்டில் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் அட்லி, தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அட்லியின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் #Vijay59FLFromNov26 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com