'தெறி' தெறிச்சிருச்சு, 'மெர்சல்' மிரட்டும்: அட்லி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வளர்ந்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான ஆங்கில ஊடகம் ஒன்றின் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அட்லி தனது மனைவி ப்ரியாவுடன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அட்லிக்கு ஆர்வமுடன் ஈடுபாடு (Passionate Diligent ) கொண்டவர் என்ற விருது வழங்கப்பட்டது. பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோர் இணைந்து அட்லிக்கு இந்த விருதை அளித்தனர்.
இந்த விழாவில் அட்லி பேசும்போது, தளபதி விஜய் நடித்த 'தெறி' தெறிச்சிருச்சு என்றும், தற்போது உருவாகி வரும் 'மெர்சல்' மிரட்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நீதானே' என்ற மெலடி பாடலை தனது மனைவி ப்ரியாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக கூறினார். தனது மனைவி ப்ரியா தனக்கு இரண்டாவது அம்மா போன்றவர் என்றும் அதனால் இந்த பாடலை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இளையதளபதி குறித்து ஒரு வார்த்தை கூறும்படி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க அதற்கு அட்லி, 'தளபதி' என்று கூறினார். அப்போது அரங்கமே கரகோஷத்தில் மூழ்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments