அஜித் குறித்து அட்லி பதிவு செய்த டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூலில் புதிய சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும், விஜய், நயன்தாரா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்களிடம் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் மற்றும் படக்குழுவினர் குறித்தும் இயக்குனர் அட்லி தற்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்
அந்த வகையில் ஒரு ரசிகர் ’அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் அட்லி, ’நான் அஜித் அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் என்னுடைய ஃபேவரிட் படங்கள்’ என்று கூறியுள்ளார்
மேலும் தல மற்றும் தளபதி ஆகிய இரண்டு பேருக்கும் சேர்த்து ஒரு ஸ்கிரிப்ட் உங்களால் தயார் செய்ய முடியுமா? என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு இன்னும் அட்லீ பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
I have great respect for Ajith sir!! My recent favourites are viswasam and Nerkonda Paarvai #AskAtlee https://t.co/tyru7Rd66u
— atlee (@Atlee_dir) October 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments