'தெறி' இந்தி ரீமேக் டைட்டிலை அறிவித்த அட்லி.. ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ’தெறி’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் 8 ஆண்டுகள் கழித்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் சமீபத்தில் பூஜை மும்பையில் நடந்த போது இந்த படத்தை தயாரிக்கும் அட்லி, ப்ரியா அட்லி ஆகிய இருவரும் பூஜையில் கலந்து கொண்டனர் என்பதும் அது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

’தெறி’ ரீமேக் படத்தில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா கபி, மகேந்திரன் கேரக்டரில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் அட்லி தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டைட்டில் ’பேபி ஜான்’ என்று அறிவித்துள்ளதோடு டைட்டில் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

நடிகை ரஜிஷா விஜயன் காதலர் இந்த திரையுலக பிரபலமா? திருமணம் எப்போது?

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான ரஜிஷா விஜயன் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலம் ஒருவரை காதலித்து வரும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக

சமூக வலைத்தளத்தில் அறிமுகமான இளம்பெண்.. நிர்வாண பட ஆசை காட்டி நடிகரை ஏமாற்றிய சம்பவம்..!

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்புவதாக ஆசை காட்டி துணை நடிகர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 9ல் வெளியாகும் படக்குழுவிற்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து.. நெகிழ்ச்சி அடைந்த ஹீரோ..!

பிப்ரவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' மணிகண்டன் நடித்த 'லவ்வர்' உள்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'லவ்வர்'

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக்குழுவுக்கு கிராமி விருது.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து  இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

மெகா ஸ்டாருடன் 18 ஆண்டுகள் கழித்து இணையும் த்ரிஷா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் உடன் மீண்டும் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில்