அட்லியால் தள்ளிப்போகுமா 'வாடிவாசல்'.. என்னதான் நடக்குது?

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்காமல் உள்ளது. இதனால், படம் எப்போது தொடங்கும் என்பது குழப்பமாக இருக்கிறது.

அதே நேரத்தில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகிய இருவரும் ’வாடிவாசல்’ விரைவில் தொடங்கும் என்று குறிப்பிட்டு வந்துள்ளனர். குறிப்பாக, இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'விடுதலை 2’ படம் முடிந்தவுடன் வாடிவாசல் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ’கங்குவா’ படத்தை முடித்துவிட்டு, சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக அட்லி மற்றும் சூர்யா இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இது சூர்யாவின் 45வது படமாக உருவாகும் என்று கூறப்படுகிறது. ’வாடிவாசல்’ இந்நிலையில், சூர்யா - அட்லி இணைய இருப்பது உறுதியாக இருந்தால், வாடிவாசல் திரைப்படம் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

 

More News

நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!

நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில்

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல்

சினிமாவில் சாதிக்க முடியாதவர்களால் தோல்வி அடையும் திரைப்படங்கள்.. பார்த்திபன் ஆதங்கம்..!

சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள், ஒரு கேமராவை தூக்கி வைத்து, விமர்சனம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும், அந்த வகை வீடியோக்களே

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து