அட்லி-ஷாருக்கானின் 'ஜவான்' டீசர்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக வெளியாகியுள்ள இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட என ஐந்து மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் டைட்டில் ஏற்கனவே வெளியான தகவலின்படி ’ஜவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டீசரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், யோகி பாபு உள்பட பல தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
When @iamsrk and @atlee_dir come together, it’s bound to blow your mind ??
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) June 3, 2022
Get ready for the action entertainer #Jawan, in cinemas on 2nd June 2023!https://t.co/xMsMCKODFk
Releasing in Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.@gaurikhan @VenkyMysore
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com