ஒரே டிசைனில் டிரஸ்.. ஆனந்த் அம்பானி - ராதிகா சங்கீத் விழாவில் அட்லி - ப்ரியா.. செம்ம கிளாமர்..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முந்தைய சங்கீத் விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவான சங்கீத் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக தோனி தனது மனைவி சாக்சி உடன் கலந்து கொண்டார். நடிகை அலியா பட், சாரா அலிகான், ஷாஹித் கபூர், நேகா சர்மா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அட்லி மற்றும் அவரது மனைவி ப்ரியா கலந்து கொண்ட நிலையில் இருவரும் ஒரே டிசைனில் காஸ்டியூம் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பாக ப்ரியாவுக்கு இந்த காஸ்டியூம் மிகவும் கிளாமராக இருந்ததாகவும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்த புகைப்படங்கள் இருவரின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.