8 ஆண்டுகள் கழித்து அட்லி குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வைரல் புகைப்படம்!

அட்லீ மற்றும் ப்ரியா ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது அட்லி மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லி என்பதும் அவர் ஆர்யா-நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது அட்லி தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூகவலைதளத்தில் அட்லி அறிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்த நிலையில் அட்லி-ப்ரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. அதிசயத்தை பார்க்க குவியும் கூட்டம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு கால்களுடன் கூடிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளததை அடுத்து அந்த குழந்தையை காண்பதற்காக மருத்துவமனையை நோக்கி கூட்டம் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஷாலின் 'லத்தி' சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

விஷால் நடித்த 'லத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. 

வேற லெவலில் விமர்சித்த ஷிவின்.. எழுந்து நின்று கைதட்டிய அசீம்!

தன்னை வேற லெவலில் விமர்சனம் செய்த ஷிவினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அசீம் எழுந்து நின்று கைதட்டிய வீடியோ இன்றைய அடுத்த புரமோவில் இடம்பெற்றுள்ளது.

'கலகத்தலைவன்' உள்ளிட்ட இந்த வார ஓடிடி ரிலீஸ்: முழு விபரங்கள்!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நான்கு முதல் ஆறு திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ரிலீசான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன

கம்பீரமாக இருந்த கேப்டனா இவர்? விஜயகாந்த் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் ரஜினி கமலுக்கு இணையாக பல வெற்றி படங்களை கோலிவுட்டில் விஜயகாந்த் கொடுத்து வந்தார் என்பதும் அவர் திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் புகுந்து தொடர் வெற்றிகளை