8 ஆண்டுகள் கழித்து அட்லி குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லீ மற்றும் ப்ரியா ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது அட்லி மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அட்லி என்பதும் அவர் ஆர்யா-நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது தெரிந்ததே.
இதனை அடுத்து தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது அட்லி தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை சமூகவலைதளத்தில் அட்லி அறிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்த நிலையில் அட்லி-ப்ரியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Happy to announce that we are pregnant need all your blessing and love ❤️❤️
— atlee (@Atlee_dir) December 16, 2022
Wit love
Atlee & @priyaatlee
Pc by @mommyshotsbyamrita pic.twitter.com/9br2K6ts77
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout