அட்லி - ப்ரியா தம்பதியின் மகனுக்கு என்ன பெயர் தெரியுமா? இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

பிரபல இயக்குனர் அட்லிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையின் பெயர் குறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’தெறி’, ’மெர்சல்’, ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகை பிரியா என்பவரை அட்லி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த அட்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் தனது ஆண் குழந்தைக்கு ’மீர்’ என்ற பெயர் வைத்துள்ளதாக அட்லி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழ் திரை உலக பிரபலங்கள் குறிப்பாக சமந்தா, சைந்தவி உள்ளிட்டோர் அட்லி - பிரியா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.