'காதலர் தினத்தில்' அட்லி மனைவி ப்ரியாவின் ரொமான்ஸ் டுவீட்!

  • IndiaGlitz, [Sunday,February 14 2021]

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகில் உள்ள நட்சத்திர தம்பதிகளும், நட்சத்திர காதலர்களும் தங்கள் இணையுடன் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பட்டு வேட்டி பட்டு சேலையில் காதலர் தினத்தை கொண்டாடிய செய்தியை சற்று முன் பார்த்தோம். அந்த வகையில் தற்போது அட்லீ மற்றும் பிரியா அட்லி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் காதலர் தினம் மெசேஜ்களை பதிவு செய்துள்ளனர்.

பிரியா அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் ’நீங்கள்தான் என்னுடைய ஒரே ஒரு உள்ளம். இன்றும் நாளையும் என்றும் நான் உங்களுடன் அன்புடன் இருப்பேன். எங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த உலகம் முழுவதும் அன்பு, காதல் பரவட்டும் என்று அவர் பதிவு செய்துள்ளார் .

அதேபோல் இயக்குனர் அட்லி தனது இன்ஸ்டாவில், ‘என்னுடைய வாழ்க்கையான ப்ரியாவுக்கு மகிழ்ச்சியான காதலர் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

காதலர் தினத்தில் காதலரின் கைபிடித்த நயன்தாரா: வைரல் புகைப்படம்!

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடி வரும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் காதலர் தினம் சிறப்பாக காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது 

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே: கமல்ஹாசனின் காதலர் தின மெசேஜ்!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி இன்று இந்தியா உள்பட உலகம்

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் குஷி!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ்

செல்ல பேரனுடன் கமல்-ரஜினி பட நடிகை: வைரல் புகைப்படம்!

கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்

40 ராணுவ வீரர்கள் பலியான புல்வாமா தாக்குதல்: 2ஆம் ஆண்டு நினைவு நாள்!

இந்திய ராணுவ வீரர்கள் 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் நடந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பொது மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்