அட்லி-ப்ரியாவுக்கு மறக்க முடியாத நாள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகிய இருவருக்கும் நேற்று மறக்க முடியாத நாளை முன்னிட்டு அந்த நாளை கொண்டாடினர். அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரான அட்லி சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி கிருஷ்ணப்பிரியா என்பவரை அட்லி திருமணம் செய்து கொண்ட நிலையில் நேற்று அவர்களது ஒன்பதாவது திருமண நாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து ப்ரியா அட்லி சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒன்பதாவது ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அட்லி-ப்ரியா தம்பதிக்கு நடிகை சாயிஷா, நாசரின் மனைவி கமலா நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அட்லி - பிரியா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.