காதலர் தினத்தில் ஒரு அழுத்தமான அன்பு முத்தம்.. அட்லி-ப்ரியாவின் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

ஒவ்வொரு காதலர் தினத்திலும் திரை உலக பிரபலங்கள் அந்த தினத்தை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டு காதலர் தினத்திலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பல திரையுலக பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகின.

அந்த வகையில் இயக்குனர் அட்லி மற்றும் அவருடைய மனைவி ப்ரியா அட்லி, காதலர் தினத்தை கொண்டாடிய வீடியோ அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையுடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லி, ப்ரியா அட்லியின் இந்த வீடியோவின் இறுதியில் பிரியா அட்லி, அட்லிக்கு ஒரு அழுத்தமான அன்பு முத்தம் கொடுத்த காட்சியும் உள்ளன.

இந்த வீடியோவை அடுத்து அட்லி, ப்ரியா அட்லிக்கு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதனை மாபெரும் வெற்றிப் படமாக்கிய அட்லி, அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

ரஜினி மகள் மாதிரியா? அய்யய்யோ வாய்ப்பே இல்லை: ஸ்ருதிஹாசன் பேட்டி..!

ரஜினி மகள்கள் அவர்களுடைய அப்பாவை வைத்து திரைப்படம் இயக்கிய நிலையில் நீங்கள் உங்கள் அப்பாவை வைத்து எப்போது திரைப்படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு  நடிகை ஸ்ருதிஹாசன் பதில் அளித்துள்ளார்.

நடிகை சமந்தா அறிவித்த சர்ப்ரைஸ் இதுதான்.. சமூக ஆர்வலர்களிடம் இருந்து குவியும் பாராட்டு..!

நடிகை சமந்தா அடுத்த வாரம் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் அந்த சர்ப்ரைஸ் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண நெருக்கடியால் நின்றுபோன நடிகர் சங்க கட்டிடம்: அமைச்சர் உதயநிதி செய்த உதவி..!

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டிடம் நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அஜித்தின் 'ஏகே 63' படத்தின் நாயகி இந்த இருவரில் ஒருவரா? ஆதிக்கின் வேற லெவல் திட்டம்..!

அஜித்தின் 63 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படத்தின் நாயகி முடிவு செய்யப்படும்

என்ன ஜானு இதெல்லாம்.. 'பிகினி' காஸ்ட்யூமில் '96' நடிகை.. வைரல் வீடியோ..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில்