பெற்றோர் ஆன அட்லி-ப்ரியா அட்லி.. என்ன குழந்தை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லியின் மனைவி ப்ரியா அட்லி கர்ப்பமாக இருந்த நிலையில் சற்றுமுன் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தளபதி விஜய் நடித்த ’தெறி’, ‘மெர்சல்’, மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அட்லி, தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அட்லி - பிரியா திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் சமீபத்தில் ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் கர்ப்பகால புகைப்படங்களும் அவர்களது சமூக வலைதளத்தில் வைரலானது என்பது தெரிந்ததே. மேலும் ப்ரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் அட்லி-ப்ரியா அட்லி தம்பதிகள் பெற்றோர் ஆகி உள்ளதாகவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அட்லி மற்றும் ப்ரியாவின் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிந்து வருகின்றனர்.
They were right 😍 There’s no feeling in the world like this ♥️
— Priya Mohan (@priyaatlee) January 31, 2023
And just like tat our baby boy is here! A new exciting adventure of parenthood starts today!
Grateful. Happy. Blessed. 🤗♥️🙏🏼 pic.twitter.com/w0QZnjHg9W
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments