ஜப்பானில் வெளியாகும் அட்லி - நயன்தாரா படம்.. இன்னும் எத்தனை கோடி வசூல்?

  • IndiaGlitz, [Thursday,September 12 2024]

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜப்பானில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கிய முதல் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படம் தற்போது ஜப்பான் நாட்டில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அட்லி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ’ஜப்பான் ரசிகர்கள் ரெடியா? நவம்பர் 29ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் ’ஜவான்’ வெளியாக போகிறது’ என்று அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மொழி போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ஜப்பானில் இன்னும் எத்தனை கோடி வசூலாக போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'ரகு தாத்தா' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன

விஜய் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

தளபதி விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்ட நிலையில்

இண்டர்வெல் என்பதை எடுத்தால் தான் சினிமா முன்னேறும்: இயக்குனர் சீனுராமசாமி

சினிமா தொழில் முன்னேற வேண்டுமென்றால் முதலில் இண்டர்வெல் என்பதை எடுத்து விட வேண்டும் என 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

நாளை வெளியாகிறது சன்னி லியோன் திரைப்படம்.. 'கோட்' வசூல் பாதிக்குமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் வேறு எந்த புதிய தமிழ் திரைப்படமும் நாளை வெளியாகவில்லை என்பதும் 'கோட்' திரைப்படமே

தொடங்கிய சில வாரங்களில் 4வது இடத்தை பிடித்த சன் டிவி சீரியல்.. இந்த வார டிஆர்பி தகவல்..!

சன் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியல் இந்த வார டிஆர்பியில் நான்காவது இடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.