close
Choose your channels

அட்லி-கீர்த்தி சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா? புதிய ரிலீஸ் தேதி என்ன?

Sunday, April 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’தெறி’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது.

இந்த படத்தின் பூஜையில் அட்லி, பிரியா அட்லி, கீர்த்தி சுரேஷ், வருண் தவான் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘தெறி’ ஹிந்தி ரீமேக்கில் விஜய் கேரக்டரில் வருண் தவான், சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கேரக்டரில் வாமிகா நடித்து வருகின்றனர் என்றும் இந்த படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆவதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் விரைவில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment