close
Choose your channels

அல்லு அர்ஜூன் படம் டிராப்? மீண்டும் பாலிவுட் செல்லும் அட்லி.. இவர் தான் ஹீரோவா?

Monday, June 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் மீண்டும் பாலிவுட்டுக்கு அட்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா, நயன்தாரா நடித்த ’ராஜாராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதனை அடுத்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி, ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ படத்தை அடுத்து இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் கதைக்கு அல்லு அர்ஜுனுக்கு பதில் சல்மான் கான் இடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை நிறைவு கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சல்மான் கான் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ’சிக்கந்தர்’ படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் அட்லி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் பாலிவுட் செல்லும் அட்லி, ’ஜவான்’ போலவே 1000 கோடி ரூபாய் வசூல் படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment