அல்லு அர்ஜூன் படம் டிராப்? மீண்டும் பாலிவுட் செல்லும் அட்லி.. இவர் தான் ஹீரோவா?

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் மீண்டும் பாலிவுட்டுக்கு அட்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யா, நயன்தாரா நடித்த ’ராஜாராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதனை அடுத்து பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி, ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் ’புஷ்பா 2’ படத்தை அடுத்து இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் கதைக்கு அல்லு அர்ஜுனுக்கு பதில் சல்மான் கான் இடம் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை நிறைவு கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சல்மான் கான் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ’சிக்கந்தர்’ படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் அட்லி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மீண்டும் பாலிவுட் செல்லும் அட்லி, ’ஜவான்’ போலவே 1000 கோடி ரூபாய் வசூல் படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

வீட்ல ஃபேன் கூட இல்லை.. ஆனால் நியூயார்க் தெருக்களில் காற்று வாங்கும் மாயா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மாயா, நியூயார்க் தெருக்களில் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்

'பரவாயில்லை பொண்ணு கொடுக்குறாங்க என்னை நம்பி.. திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரதீப் அந்தோணி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் அந்தோணி தன்னுடைய திருமண அறிவிப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவியை விவாகரத்து செய்த பிரபல நடிகர்.. ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகை..!

பிரபல நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருடைய மனைவி மீது ரூபாய் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை ஒருவர் வழக்கு தொடர்ந்து இருப்பது பரபரப்பை

பெரும் சதிகளுக்கு பின்னால், மறுக்கப்படும் காதல் கதை 'பருவு': ZEE5 தளத்தில் ஒரு த்ரில் தொடர் !!

ZEE5 ஒரிஜினல்  தெலுங்கு சீரிஸான ​​"பருவு" தற்போது ZEE5 இல் ஸ்ட்ரீமாகிறது. மேலும் இந்த சீரிஸ் தமிழ் மொழியிலும்  ஸ்ட்ரீமாகிறது.

ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படத்தில் 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்: சூப்பர் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 23' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்