த்ரிஷா, சமந்தாவை அடுத்து இன்னொரு நடிகை.. அட்லி-அல்லு அர்ஜுன் படத்தில் என்னதான் நடக்குது?

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

இயக்குனர் அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் என செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தியை விட இந்த படத்தில் நடிக்கும் நாயகி குறித்த செய்தி தான் கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது.

அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் இணையும் திரைப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி வைரலானது. இதனை அடுத்து அடுத்த நாளே த்ரிஷா இந்த படத்தில் இல்லை, சமந்தா தான் நாயகி என்றும் ஏற்கனவே சமந்தா ’தெறி’ ‘மெர்சல்’ படங்களில் நடித்துள்ளதால் அட்லி அவரை தேர்வு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது த்ரிஷாவும் இல்லை சமந்தாவும் இல்லை இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பது பூஜா ஹெக்டே தான் என்று தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த தகவல்கள் எல்லாம் படக்குழுவினர்களிடமிருந்து கசிகிறதா? அல்லது நெட்டிசன்களே தங்கள் இஷ்டத்துக்கு கற்பனை கலந்து பதிவு செய்து வருகிறார்களா என்று தெரியவில்லை.

அட்லி -அல்லு அர்ஜுன் திரைப்படமே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில், திரையுலகில் உள்ள அனைத்து நடிகைகளையும் தினமும் ஒருவரை தேர்வு செய்து இந்த படத்தின் நாயகி என கூறி வருவது சமூக வலைதளங்களின் நம்பகத்தன்மையை குறிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே அட்லி, அல்லு அர்ஜுன் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையும், இந்த படத்தின் நாயகி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்கும் வரையிலும் பொறுமை காப்போம்.

 

More News

மற்றவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை விட வில்லிசை எனக்கு கொடுக்கும் புகழ் அதிகம் எனக் கூறிய வில்லுப்பாட்டு மாதவி

நான் 13 வயதில் இருந்து பாடுகிறேன்.பாட ஆரம்பித்து 5 வருடம் ஆகிறது.நானூறு மேடையில் இதுவரை பாடி இருக்கிறேன்.வெளி மாவட்டத்தில் இருந்து என்னை அணுகி பாட அழைக்கும்போது அதிக சந்தோஷப்பட்டேன்....

அஞ்சுவட்டத்தம்மன் & வராகி அம்மன் - பஞ்சமி வழிபாடு, வீரகத்தி தோஷம், முருகன் அருள் - ஜோதிடர் சீதா சுரேஷ்

முருகனின் முழு அருளை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? ஜோதிடர் சீதா சுரேஷ் கூறுகிறார்.

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு.. டைட்டில் இதுதான்..!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் 'விடுதலை 2' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி

பிக்பாஸ் பாலாஜிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணமாகி விட்டதா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது

அல்லு அர்ஜுன் படத்தில் அட்லியின் ஆஸ்தான நடிகை.. த்ரிஷா உண்டா? இல்லையா?

அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.