'நாடோடிகள் 2' படத்தால் அதுல்யாவுக்கு கிடைத்த பெஸ்ட் தோழி!

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

சமீபத்தில் வெளியான சமுத்திரகனியின் ’நாடோடிகள் 2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரை அரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவரான அதுல்யா ரவி இன்னொரு நாயகியான அஞ்சலியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நெருக்கம் ஆகி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தற்போது என்னுடைய நட்பு வட்டாரத்தில் அஞ்சலிதான் பேஸ்புக் தோழி’என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நாடோடிகள்-2' படத்தில் நடிக்கும்போது அஞ்சலி எனக்கு சீனியர். ஒரு நடிகைக்கு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு கட்டாயம் தேவை என்பது போன்ற விஷயங்கள் கூட தெரியாமல் இருந்த எனக்கு, அந்த படத்தில் ஒரு நல்ல தோழியாக அவர் கிடைத்தார். எனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தார். இப்போது சென்னை வந்தால் அவரும், ஹைதராபாத் போனால் நானும் வீடு வரை போய்விட்டு வரும் அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆகிட்டோம். இந்த நட்பு வட்டத்துக்குள் இப்போது இந்துஜாவும் இணைஞ்சுட்டாங்க. இப்போ, இவர்கள் இல்லாமல் என் குடும்ப நிகழ்ச்சிகள் இல்லை.

மேலும் ‘நாடோடிகள் 2’ படத்தையடுத்து ’கேடவர்’, வட்டம்’, ’எண்ணித்துணிக’ மற்றும் வெப் தொடர் ஆகியவற்றில் பிசியாக அதுல்யா ரவி நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது