சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் நாயகி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் அதுல்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளிவந்த 'காதல் கண்கட்டுதே' படத்தில் நடித்தவர், மேலும் தற்போது உருவாகி வரும் சமுத்திரக்கனியின் ஏமாலி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்

வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் ஒரு க்ரைம் கதையம்சம் கொண்டது என்பதும் திகில் படமாக அமையவுள்ள இந்த படத்தில் சுசீந்திரன் செக்யூரிட்டியாகவும் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ஜனவரி 1, பல குடும்பங்கள் மறக்க நினைக்கும் நாள்: சுசீந்திரன்

2017ஆம் ஆண்டு முடிவடைந்து இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புதிய ஆண்டான 2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகில் உள்ள அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முந்திய கமல்ஹாசனின் அறிவிப்பு

ரஜினிகாந்த் இன்னும் சற்றும் நேரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார். ரஜினியின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே காத்திருக்கின்றது

ஆர்.கே.சுரேஷ்-திவ்யா திருமணம் நிறுத்தப்பட்டதா?

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தரும், 'தாரை தப்பட்டை, தர்மதுரை, மருது உள்பட பல படங்களில் வில்லனாகவும், தற்போது ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் ஆர்.கே.சுரேஷ்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் காலமானார்

தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் பல திரைப்படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 60

காத்தோம் ஜல்லிக்கட்டை ! காப்போம் கலாச்சாரத்தை !

மேற்கத்திய கலச்சாரத்தின் ஆதிக்கம் உள்ள இந்த காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி சட்டைகளுக்கு எதிரான...