தெலுங்கு, இந்திக்கு செல்கிறது தமிழின் கணக்கு

  • IndiaGlitz, [Sunday,February 28 2016]

'ஈட்டி' வெற்றியை தொடர்ந்து அதர்வா முரளி நடித்த 'கணிதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. தமிழக அரசின் வரிவிலக்கு, பாசிட்டிவ் ரிசல்ட் ஆகியவை காரணமாக எதிர்பார்த்த வசூலை விட அதிகமாக பெற்றுக்கொண்டிருக்கும் 'கணிதன்' படத்திற்கு தற்போது மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், தமிழில் அதர்வா நடித்த கேரக்டரில் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும், கேதரின் தெரசா கேரக்டரை தெலுங்கிலும் அவரே நடிக்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்தியில் அதர்வா கேரக்டரில் அர்ஜூன்கபூர் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு முக்கிய பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 'கணிதன்' திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியே இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி, விக்ரம் பாணியில் செல்லும் சூர்யாவின் 'S3'

சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டீசர் வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் அவரே 'தோழா' இசை வெளியீட்டில் உறுதிப்படுத்தியுள்ள நிலையில்....

2.0 படப்பிடிப்பிற்காக சென்னை வந்த பிரபலம்

லைகா நிறுவனத்தின் மாபெரும் பட்ஜெட்டில் ஷங்கரின் பிரமாண்டமான இயகக்த்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது....

சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் வெற்றியுடன் ரீஎண்ட்ரி ஆகியுள்ள சிபிராஜ் அதே உற்சாகத்தில் நடித்து வரும் படம் 'ஜாக்சன் துரை'....

விஷால் படத்தை இயக்கும் வித்தியாசமான இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் வித்தியாசமான படங்களை இயக்கி வரும் தரமான இயக்குனர்களில் ஒருவராகிய இயக்குனர் மிஷ்கின் தற்போது 'சவரக்கத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்....

கார்த்தியின் அடுத்த இயக்குனர் யார் தெரியுமா?

நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிய 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது...