முதல்முறையாக அதர்வாவுடன் இணையும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

அதர்வா நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய 'பூமராங்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். அதர்வா, சமுத்திரக்கனி முதல்முறையாக இணையும் படம் இதுதான் என்றும், இருவரின் கேரக்டர்களுக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் இருக்கும் என்றும் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ரொமண்டிக் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

More News

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது.

சேரனின் 'திருமணம்' ரன்னிங் டைம்

இயக்குனர் சேரன் இயக்கி நடித்த 'திருமணம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்

ரஜினி மகள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமணம் இன்று காலை லீலா பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

ரஜினியின் அடுத்த படத்தில் 'தளபதி -துப்பாக்கி' கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

அருண்விஜய்யின் 'பாக்சர்' படத்தில் நாயாகியான பாக்ஸர் வீராங்கனை

நடிகர் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.