'அப்பா, நான் உன்னை ஜெயிக்க வைப்பேன்': அதர்வா அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த பாடத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ’எல்லாருக்கும் அவங்க அப்பா தான் ஹீரோ, உங்க ஹீரோ தோற்று விடுவார் என்று சொன்னால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாது அல்லவா! அப்பா நான் உன்னை ஜெயிக்க வைப்பேன்’ என்ற அதர்வாவின் வசனத்துடன் தொடங்கும் கிளிம்ப்ஸ் வீடியோ அட்டகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இந்தப் படத்தில் அருண் பாண்டியன் உள்பட பலர் நடிக்க உள்ளனர் என்பதும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை பிரமோட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்து வருகின்றனர் என்பதும், இந்த படத்திற்கு ’ட்ரிகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.