பூமராங் படத்திற்காக அதர்வா எடுத்த வித்தியாசமான முயற்சி

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

இயக்குனர் ஆர்.கண்ணன் மற்றும் அதர்வா இணைந்து உருவாக்கியுள்ள 'பூமராங்' திரைப்படத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து தனது உழைப்பை அதர்வா கொட்டியுள்ளார். இந்த படத்தில் அதரவாவின் தோற்றங்அக்ளை உருவாக்க மும்பையில் இருந்து மேக்கப் துறையில் வல்லுனர்களான கலைஞர்கள் ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா ஆகியோர் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை தனித்துவமான முறையில் அளவெடுத்து சென்ற மேக்கப்மேன்கள் ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள். அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது. 30 நாட்களுக்கு பின்னர் ப்ரோஸ்தடிக் கேஸ்ட் உருவாக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதர்வாவுக்கு இந்த புதுவித மேக்கப் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்துள்ளது.

பூமராங் படத்தில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்றார். மேலும் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல் ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பயிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைக்கிறார். படத்தை இயக்குவதோடு மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் படத்தை தயாரிக்கிறார் ஆர் கண்ணன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான எல்லையை தொடும் முனைப்போடு உழைக்கும் அதர்வாவுக்கு, பூமராங் படமும் அப்படி அமையும் என்ற உறுதியோடு இருக்கிறார்கள் படக்குழுவினர்.

 

More News

'நரகாசுரன்' படத்தில் இருந்து விலக தயார்! கவுதம் மேனனின் அதிரடி அறிக்கை

கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்', செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தாமதத்திற்கு இயக்குனர் கவுதம் மேனனே காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தாமதம் ஏன்? கவுதம் மேனன் மீது புகார்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த படம் 'நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது.

அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்

காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

தளபதி விஜய் நடித்த ஒரு படத்தில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற வசனம் வரும். இந்த வசனம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்,. இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா வாழ்விலும் தற்போது நடந்துள்ளது.