அதர்வாவின் 'செம போத ஆகாதே' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய அதர்வா முதன்முதலில் தயாரித்து நடித்த 'செம போத ஆகாதே. இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 16 திரையரங்க வளாகங்களில் 121 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.42,78,388 வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கடந்த வெள்ளியன்று சில தவிர்க்க முடியாத காரணங்களால் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதால் இந்த படத்தின் வசூல் சராசரி வசூலாக அமைந்துள்ளது. இருப்பினும் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த பட வசூலில் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது