அதர்வாவின் 'தள்ளிப் போகாதே' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 13 2021]

அதர்வா நடித்த ‘தள்ளிப் போகாதே’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

’ஜெயங்கொண்டான்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ‘தள்ளிப் போகாதே’. அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்த இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ’நின்னுக்கோரி’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தள்ளிப் போகாதே’ படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில மாதங்கள் ஆன நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 3 என தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோபிசுந்தர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்சார் அதிகாரிகள் ’யூஏ’ சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.