அதர்வா - பிஎஸ் மித்ரன் இணைந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Thursday,September 08 2022]

அதர்வா நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனத்தில் உருவாகிய படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா நடிப்பில், ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கிய திரைப்படம் ’ட்ரிக்கர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணியை தொடங்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதர்வா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’, விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார்.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’குருதியாட்டம்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ படமும் அவருக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் பூஜையுடன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டிருப்பது

கார்கில் நினைவிடத்தில் அஜித் என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் தற்போது வட இந்தியாவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அவர் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பெங்களூரு கனமழை, வெள்ளம் எதிரொலி: ஒரு இரவுக்கு லாட்ஜில் இத்தனை ஆயிரம் வாடகையா?

பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்ததை அடுத்து சாதாரணமானவர்களின் வீடு முதல் கோடீஸ்வரர்களின் வீடு வரை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள

இப்படியெல்லாம் வொர்க்-அவுட் செய்ய முடியுமா? பிகில் நடிகையின் வேற லெவல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிரமைல் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.