ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக்கில் பிரபல தமிழ் நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

ஒரு திரைப்படம் தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டால் அந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நடிப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் சூப்பர்ஹிட்டான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஒரு தமிழ் நடிகர் நடிக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா நடிப்பில் உருவான 'ஜிகர்தண்டா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பாபிசிம்ஹா வேடத்தில் நடிக்க வருண்தேஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் சித்தார்த் கேரக்டரில் நடிக்க தமிழ் நடிகர் அதர்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அதர்வா தெலுங்கு திரையுலகில் காலடி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது

More News

'சந்திரமுகி' படத்துடன் கனெக்சன் ஆகும் விஷாலின் அடுத்த படம்

விஷால் நடித்து முடித்துள்ள 'அயோக்யா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் சுந்தர் சி இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ்: விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஷாக்!

விஜய்சேதுபதி நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படத்தை விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த 'இந்தியன்' பட நடிகை!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'இந்தியன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை சந்தித்த நடிகர் விஷ்ணு

நடிகர் விஷ்ணு சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றின்போது காயம் ஏற்பட்டு தற்போதுதான் குணமடைந்துள்ளார். விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது

தேர்தலுக்கு முன் இன்னொரு தாக்குதலா? இம்ரான்கான் சந்தேகம்

தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் மீது இந்திய அரசு இன்னொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாக அந்நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது