கதவ திறந்தபோதே ஓடியிருக்கலாமே! ஆரவ் புலம்பல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையாபுரி வெளியேறியபோதே தெரிந்துவிட்டது இனிமேல் உள்ள டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்று. இன்று என்ன டாஸ்க் கொடுக்கப்பட்டதோ தெரியவில்லை, பிக்பாஸ் குடும்பத்தினர் குற்றுயிரும் குலை உயிருமாக உள்ளனர்.
ஒரு பக்கம் கணேஷை தரதரவென ஆரவ் பிடித்து இழுக்க, இன்னொரு பக்கம் சினேகனுக்கு இருவர் ஒத்தடம் கொடுக்கின்றனர். ஆரவ் முதன்முதலாக புலம்ப ஆரம்பித்துள்ளார். 'இதுவரைக்கும் குடிச்ச பாலெல்லாம் ரத்தமா ஓடுது. டைட்டில் வாங்கி அந்த அம்பது லட்ச ரூபாயை உடம்புக்கே செலவு செய்ய வேண்டிய நிலை வந்துடும் போல. கதவ திறக்கறேன்னு சொன்னப்பவே புரிஞ்சிருக்கணும், போகாம இருந்தது எங்க தப்புதான்' என்று புலம்பி தள்ளுகிறார்.
உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ள ஆரவ்வே புலம்பும் வகையில் அப்படி என்ன டாஸ்க் கொடுத்தார்கள் என்பதை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com