பாலம் உடைந்து மெட்ரோ ரயில், சாலையில் சரிந்த கொடூரம்… பதைக்க வைக்கும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ சிட்டியில் ஒரு மெட்ரோ ரயில் பாலம் உடைந்ததால் ஓடிக்கொண்டு இருந்த ரயில் பாலத்தோடு சேர்ந்து சாலையில் விழுந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 70 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மெக்சிகோ நகரில் ஓடிக்கொண்டு இருந்த மெட்ரோ ரயில் பாலம் உடைந்ததால் பாலத்தோடு சேர்ந்து ரயில் சாலையில் சரிந்து விழுந்து இருக்கிறது. இதனால் சாலையில் சென்றுக் கொண்டு இருந்த கார் அப்பளம் போல நொறுங்கி அதில் இருந்த 15 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த விபத்தினால் காருக்குள்ளேயே பலர் சிக்கி உயிருக்குப் போராடும் கொடூரம் ஏற்பட்டதாக மெக்சிகோ நகர மேயர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்த இடமே ரத்தக்காடாக மாறியது என அந்நகர மேயர் குறிப்பிட்டு உள்ளார். இந்த பாலம் தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மார்சலோ இபார்டு இருந்தபோது கட்டப்பட்டது என்றும் அவர் தற்போது இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த டிவிட்டரில் இரங்கல் வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புப் படையினர் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
From moments ago, the collapse of the elevated #Linea12 #MetroCDMX railway that crashed the subway. Many are blaming current Foreign Affairs Secretary, Marcelo Ebrard, who was Mayor of Mexico City when this line was built, with allegations of poor construction and money issues. pic.twitter.com/LkCl6gfKG6
— David Wolf (@DavidWolf777) May 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout