close
Choose your channels

சீன எல்லை மோதலில் 20 இந்தியர்கள் வீரமரணம்: 43 சீன வீரர்கள் பலியானதாக தகவல்

Tuesday, June 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய மற்றும் சீன எல்லையில் நேற்று இரவு இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் மூன்று இராணுவ வீரர்களும் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்திய தரப்பில் உயிரிழந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார். இதனை அடுத்து இந்திய தரப்பில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக இருக்கிறது

அதேபோல் சீன தரப்பிலும் 43 பேர் பலியாகி உள்ளதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நேற்று இரவு இரு தரப்பிற்கும் இடையே பல மணி நேரம் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானோர் காயம் அடைந்ததால் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment