1.5 அடியில் ஒரு சாமியார்… கும்பமேளாவில் கவனம் பெற்ற மனிதர்!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

ஆண்டுதோறும் உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் கும்பமேளா பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உலகெங்கிலும் உள்ள சாமியார்கள், நாக சாதுக்கள், அகோரிகள், சன்னியாசிகள், துறவிகள் எனப் பலரும் கலந்து கொள்வது வழக்கம். இப்படி கலந்து கொள்ளும் துறவிகளிடம் பொதுமக்கள் ஆசி பெறும்போது தங்களிடம் உள்ள பாவம் குறைந்து நல்வாழ்வு பெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்த வருடம் கும்பமேளா பண்டிகை இன்று முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்தப் பண்டிகைக்கு 1.5 அடி உயரமே உள்ள ஒரு நாக சாது கலந்து கொண்டுள்ளார். நாராயணன் நந் கிரிமகாராஜ் என்ற நாகா சாது துறவி கலந்து கொண்டுள்ளார். 15 அடி உயரம் அதாவது 18 அங்குலம் உயரத்துடன் 18 கிலோ எடையுடன் இந்த துறவியைப் பார்க்கும் பொதுமக்கள் அனைவரும் அவரிடம் ஆசையாகச் சென்று ஆசிப் பெற்று வருகின்றனர்.

மேலும் எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாத இந்த நாகா சாதுவை அவரது சீடர்கள் கவனித்து வருவருதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ள பொதுமக்கள் அனைவரிடம் மிக வியப்பாக இவரைப் பார்த்து வருகின்றனர். மேலும் உலகிலேயே மிக உயரம் குறைந்த துறவியாகவும் இவர் மதிக்கப்பட்டு வருகிறார். கொரோனா 2 ஆவது அலை துவங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் கும்பமேளா நிகழ்ச்சியில் ஹரித்துவாரில் மிகக் கட்டுப்பாட்டுடன் துவங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.