கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கருத்து கூறிய அஸ்வின்

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று காலை தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டார். அப்துல்கலாம் அவர்களின் சகோதரரிடம் ஆசி பெற்று பின்னர் மீனவர்களுடன் கலந்துரையாடிய கமல், தற்போது ராமேஸ்வரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.

அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவது குறித்து கமல் கூறியபோது 'பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், கமல்ஹாசனின் அரசியல் பயணம் தொடக்கம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது 'இன்று மாலை புதிய அரசியல் கட்சியை தொடங்கும் கமலின் பயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று கூறியுள்ளார். அஸ்வின் போலவே தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா? என்றுதான் தமிழக மக்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.