அஸ்வின் பரிந்துரை செய்த திரைப்படமும், நன்றி கூறிய பிரபல நடிகரும்..

  • IndiaGlitz, [Tuesday,February 23 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ஓடிடியில் வெளியான ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படமும் முதல் பாகத்தைப் போலவே தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 2’ படத்தை பல பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான அஸ்வின், ’த்ரிஷ்யம் 2படத்தை பார்த்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

’த்ரிஷ்யம் 2 படத்தில் ஜார்ஜ் குட்டி என்ற வேடத்தில் நடித்துள்ள மோகன்லால் நீதிமன்றத்தில் கிளைமாக்ஸில் செய்த டுவிஸ்ட்டை பார்த்து நான் உண்மையிலேயே சத்தமாக சிரித்து விட்டேன். இந்த அனுபவத்தை எல்லோரும் பெறுவதற்காக உடனடியாக ’த்ரிஷ்யம்’ படத்தை பார்த்து விட்டு ’த்ரிஷ்யம் 2 படத்தையும் பாருங்கள் என்று பரிந்துரை செய்துள்ளார்

இதனை அடுத்து மோகன்லால் தனது டுவிட்டரில் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்களது பிசியான ஷெட்யூலிலும், எனது ’த்ரிஷ்யம் 2 படத்தை பார்த்து அது குறித்த கருத்து தெரிவித்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் உங்களது விளையாட்டு துறையில் மிகப்பெரிய சாதனை படைக்க வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். அஸ்வின் மற்றும் மோகன்லாலின் இந்த ட்வீட்டுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

More News

கார்த்தியின் 'சுல்தான்' பட வியாபாரம் குறித்த அதிரடி அறிவிப்பு!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

நயன்தாராவின் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முதலாக நடித்த 'இருமுகன்' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு: கமல்ஹாசன் டுவீட்

44 ஆண்டுகளாக கலாச்சார நிகழ்வு நடைபெற்று வரும் தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிக்க வாருங்கள் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார் 

சென்னையின் நீர் பாதுகாப்புக்காக புதிய நீர்க்குழுமம்- பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு!

சென்னையில் ஆண்டுதோறும் கோடை காலங்களின்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பாகவே மாறிவிட்டது.

மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றம்… தனி நிறுவனம் அமைத்து தமிழக அரசு அதிரடி!

அதிமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காகவே செயல்படும் என்றும் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இயங்காது என்றும் தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.