பல ஆண்டுகளுக்கு முன்பே ஏரோமாடலிங் செஷன்ஸில் அஜித்: வைரலாகும் வீடியோ 

  • IndiaGlitz, [Tuesday,July 14 2020]

அஜித் என்றால் சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த கார் ரேஸ் சாம்பியன், சிறந்த மோட்டார் சைக்கிள் சாம்பியன் என பல அவதாரங்களில் ஜொலித்து வருபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் ட்ரோன்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார் என்பதும், அவரது தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற குழுவினர் அமைத்த ட்ரோன், இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது என்பதும் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்றது என்பதும் தெரிந்ததே.

அது மட்டுமின்றி தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் அஜித் தலைமையில் வடிவமைத்த ட்ரோன்கள் தான் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே அஜித் மற்றும் தீனா படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் ஆகியோர் ஏரோ மாடலிங் செஷன்ஸில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றை தற்போது நடிகர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

அஜித்துடன் மங்காத்தா, வேதாளம் ஆகிய திரைப்படங்களில் நடித்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை குறிப்பிட்டு இந்த வீடியோவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அஜித் மற்றும் அரவிந்த் ஆகியவர்களின் ஏரோ மாடலிங் செஷன்ஸில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் இந்த சிறிய வீடியோ அந்த செஷன்ஸின் ஒரு பார்வை என்றும், பல ஆண்டுகளாக வணிக ட்ரோன்கள் எவ்வாறு உருவாகியுள்ளது என்பது சுவாரஸ்யமானது என்றும் கூறியுள்ளார்.

More News

ராஜஸ்தான் அரசியலில் நடப்பது என்ன???

கடந்த சில தினங்களாக ராஜஸ்தான் அரசியலில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.

8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி: விரைவில் 5வது இடம்?

கடந்த சில வாரங்களுக்கு முன் உலக பணக்காரர் பட்டியலில் 10வது இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் 8வது இடத்தில் இருந்த பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 8வது

உங்களை விட உங்க அம்மா சூப்பர்: ஷிவானிக்கு நெட்டிசன்ஸ் அனுப்பிய மீம்ஸ்

தொலைக்காட்சிகளில் புகழ் பெற்று வரும் நடிகர் நடிகைகள் பலர் பெரிய திரையிலும் என்ட்ரி ஆகி நல்ல வாய்ப்புகளை பெற்று வருகின்றார்கள் என்பது தெரிந்ததே.

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கேரள பத்மநாப சுவாமி கோவில்!!! ஒளிந்து கிடக்கும் வரலாற்று ரகசியம்!!!

உலகிலேயே மிகவும் பணக்கார சுவாமிகளுள் ஒன்றாக திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கருதப்படுகிறது.

டிரைவருக்கு கொரோனா: குடும்பத்துடன் பரிசோதனை செய்து கொண்ட தனுஷ் பட நடிகை

பாலிவுட் திரையுலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய நால்வரும்