தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தமிழக வீரர் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பஞ்சாப் அணி அஸ்வினை ஏலம் எடுத்தது. இது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில் தற்போது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை அளிக்கும் வகையில் பஞ்சாப் அணிக்கு அஸ்வின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் மீது எப்போதும் அன்பு வைத்திருக்கும் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அணியின் ஆலோசகருமான சேவாக் இதனை உறுதி செய்துள்ளார். அஸ்வின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தமிழ் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் சேவாக் இடம்பெற்றுவிட்டார்.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் சர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியை அடுத்து பஞ்சாப் அணியின் வெற்றியையும் இனி ஒவ்வொரு தமிழ் ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

More News

சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் இருந்ததா? பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியின் கொடி திடீர் மாற்றமா?

சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்த கமல் அறிமுகம் செய்த கட்சியின் கொடி தமிழர் பாசறை கொடியில் உள்ள சின்னத்தை போன்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

விஷாலுக்கு கலிபோர்னியாவில் நடக்கும் சிகிச்சை என்ன?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிப்பு பணிகள் காரணமாக பிசியாக இருந்த நடிகர் விஷால், சில நாட்கள் ஓய்வுக்கு செல்வதாகவும்,

ஸ்ரீதேவி மரணம் குறித்து தடயவியல் சோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியில் கண்டுபிடிக்க துபாயில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.