எல்லார் மனசிலயும் ஒரு காதல் இருக்கும்: அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' டீசர்!

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த டீசர் அஸ்வினின் குரலுடன் தொடங்குகிறது. காதல்! வாழ்க்கையில் காதல் செய்யாதவர்கள் யாருமே இருக்க முடியாது. எல்லாருக்குள்ளும் ஒரு காதல் கதை இருக்கும். எல்லா கதைக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஆனால் நம்ம கதை, காதல் கதை நாம நினைச்ச மாதிரி தொடங்கனும்ன்னு அவசியம் இல்லை, நாம நினைச்ச மாதிரி முடியவேண்டும் என்றும் அவசியம் இல்லை என்று வசனத்துடன் டீசர் முடிகிறது.

மேலும் இந்த டீசரில் உள்ள பாடல் வரிகள் மனதை கவரும் வகையில் உள்ளது. அந்த வரிகள் இதோ:

வந்தாய் ஒரு நொடியில் விழியிலே
தந்தாய் ஒரு புயலை நொடியிலே
கொட்டும் மழைத்துளியின் நடுவிலே
கொல்லும் உனதழகில் உறுதியே

விவேக் மெர்வின் இசையில், ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அஸ்வின், அவந்திகா மிஸ்ரா, தேஜூ அஸ்வினி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிரைடன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிபிராஜின் 'மாயோன்' ரிலீஸ் தேதி இதுவா? வெளியான சூப்பர் தகவல்

சிபிராஜ் நடித்த 'மாயோன்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென பாதை மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு ஆபத்தா?

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மாறவுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பாதையை

இந்த விளையாட்டுல என்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது: 'சபாபதி' டிரைலர்

சந்தானம் நடித்த 'சபாபதி' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மலாலாவிற்கு திருமணம்… கணவர் யார் தெரியுமா?

பெண்கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யூசுப்சாய் கடந்த 2012

வெளியானது சிவகார்த்திகேயனின் அட்டகாசமான 'டான்' ஃபர்ஸ்ட்லுக்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது