அசுரனுக்கு ஆஸ்கார் மிஸ் ஆகாது: கலைப்புலி எஸ்.தாணு

  • IndiaGlitz, [Sunday,September 22 2019]

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்காரை மிஸ் செய்யாது என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு செல்லும் இந்திய திரைப்படங்கள் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் வடசென்னை, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு 7, ஆகிய தமிழ்ப்படங்களும் பரிசீலனையில் உள்ளன. இந்த மூன்று படங்களில் ஏதாவது ஒரு படம் ஆஸ்காருக்கு சென்று விருது பெற்றால் தமிழ் திரையுலகிற்கு உண்மையில் பெருமையே.

இந்த நிலையில் இந்த ஆண்டு தனுஷின் ‘வடசென்னை’ ஆஸ்கர் விருதுக்கான இந்திய படங்களின் பரிந்துரை பட்டியலில் இருப்பது போல் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ‘அசுரன்’ திரைப்படம் இருக்கும் என ’அசுரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றுவிட்ட தனுஷ், ஆஸ்கார் விருதையும் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

அஜித்தை எடுத்து ஜெயம் ரவி பக்கம் திரும்பிய போனிகபூர்

அமிதாபச்சன் நடித்த 'பிங்க் என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் படமான அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த போனிகபூர், இந்த படத்தின் வெற்றியால்

விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை: பழ கருப்பையா

விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று 'சர்கார்' படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் என்ன சொன்னாலும் அவங்களுக்கு பிடிக்காது: உதயநிதி ஸ்டாலின் 

பேனர் கலாச்சாரம் குறித்தும், சுபஸ்ரீ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவில் பேசியது

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் டி.இமான்

இணையதளங்களில் ஒரு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக ஒருவரது திறமையை ஒரே நாளில் உலகமே அறியும் வகையில்

லாஸ்லியா பதிலை கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முகின் நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு பெற்ற நிலையில் இன்று யாரை தக்க வைப்பது, யார் வெளியேறுவது என்பதை கமல் அறிவிக்கவுள்ளார்.