close
Choose your channels

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

Wednesday, August 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கத்தரிப்பூ அழகே' என்ற பாடல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பாடலை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கும் நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்னொரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று 'கத்தரிப்பூ அழகி' பாடல் மட்டுமின்றி 'பொல்லாத பூமி' என்ற பாடலையும் வெளியிட இருப்பதாகவும், இது தனுஷ் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொல்லாத பூமி பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment