'அசுரன்' படத்தின் புதிய அப்டேட்டை அறிவித்த ஜிவி பிரகாஷ்குமார்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ’அசுரன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’என் மினுக்கி’ என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ஒரு மெலடி பாடல் என்றும் இந்த பாடலை தீஜேஅருணாசலம் மற்றும் சின்மயி ஆகியோர் பாடியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
#yenminukki from 4pm today
— G.V.Prakash Kumar (@gvprakash) September 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments