தனுஷின் 'அசுரன்' ரன்னிங் டைம் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2019]

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் அளித்தனர் என்பதை பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள் ஆகும். அதாவது இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆக்சன் படத்திற்கு உரிய சரியான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது இந்த படத்திற்கு ஒரு பிளஸ் ஆக கருதப்படுகிறது

வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மார்பகம் பற்றி பேச கூச்சப்பட வேண்டாம்: நடிகை வரலட்சுமி

மார்பகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு அங்கம் என்றும், அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளியே பேச யாரும் கூச்சப்பட வேண்டியதில்லை என்றும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

'தளபதி 64' படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 64' படம் குறித்த தகவல்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூன்று நாட்களுக்கு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளதாக அறிவித்தது.

பாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ!

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவில் உள்ள ஒருசில எதிர்க்கட்சிகளும்

ரஜினி முதல்வர் ஆவார்! பாஜக தயவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது: பிரபல நடிகர்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி பங்கேற்று முதல்வர் ஆவார் என்றும், பாஜக தயவின்றி இனி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார் 

நான் ஜெயிச்சிட்டேன்: வைரலாகும் தர்ஷனின் முதல் வீடியோ

பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த தர்ஷன் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் வெளியேறினார்.