close
Choose your channels

வெற்றிமாறனுக்கு கலைப்புலி தாணு செய்த கெளரவம்!

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

46 ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் ’அசுரன்’ படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், ’அசுரன்’ படத்தை சிறப்பாக இயக்கிய வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும் அதன்பின் தமிழில் சிறந்த படமாக ’அசுரன்’ படமும் அறிவிக்கப்பட்டது

இதனை அடுத்து இந்த படத்தை தயாரித்த எஸ் தாணு அவர்கள் ’அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றிமாறனை நேரில் சந்தித்து ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். தனுஷ் தற்போது வெளிநாட்டில் ஹாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதால் மீண்டும் இதே கூட்டணிக்கு தேசிய விருது கிடைக்க ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment