இன்று முதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தனுஷின் 'அசுரன்'

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

'அசுரன்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று விருதுநகரில் நடைபெறவுள்ளதை அடுத்து தனுஷ் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்றே விருதுநகருக்கு சென்றனர். அவரை விருதுநகர் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறப்பான முறையில் வரவேற்றனர். விருதுநகர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இன்றுமுதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தனுஷ், மஞ்சுவாரியர் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படத்தில் வடிவேலு, அஜய்ராஜ், பிரேம்ஜி அமரன், விஜய்வசந்த், வைபவ், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
 

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ!

சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் சிம்புவின் தீவிர ரசிகர்களை மட்டும் திருப்தி செய்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

சூர்யாவின் 'என்.ஜி.கே' ரன்னிங் டைம் குறித்த தகவல்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில்

செளந்தர்யா திருமணத்தை அடுத்து ரஜினி வெளியிட்ட அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யாவின் திருமணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காமெடி நடிகர் கருணாஸ் காட்டிய விஸ்வாசம்

காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில வருடங்களில் அணிகள் மாறி மாறி ஆதரவை தந்து கொண்டிருந்தார்.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் காஜல் அகர்வால் நாயகியாகவும்