அசுரன் மஞ்சு வாரியார் மிரட்டிய ப்ரதி பூவான்கோழி. மலையாள டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியார். இவர் புதிதாக நடித்துள்ள ப்ரதி பூவான்கோழி என்ற மலையாள படத்தின் டீசர் நேற்று வெளியாகி ஆறு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்த படத்தை இயக்கி நடித்தும் உள்ளார். ஏற்கனவே இவர் இயக்கி மஞ்சு வாரியார் நடித்து 2014-ம் ஆண்டு வெளிவந்த How old are you திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான Filmfare அவார்டையும் மஞ்சு வாரியாருக்குப் பெற்றுக்கொடுத்தது. இதனால் இந்த புதிய படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று வெளியான படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் இந்த மாதம் 20-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments