தனுசுக்கு ஒரு வருடம், விஜய்சேதுபதிக்கு இரண்டாவது வருடம்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகி விட்டது என்பதும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ’96’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடம் ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தனுஷின் ’அசுரன்’ ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ’அசுரன்’ காமன் டிபி போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘அசுரன் வெளியாகி ஒரு வருடம் நிறைவுறும் நிலையில், #1YearofBBAsuran CDP வெளியிடுவதில் பெருமை. வெற்றிக்கு வித்திட்ட வெற்றிமாறன், தனுஷ் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் நெகிழ்வில், மகிழ்வில் என்று கூறியுள்ளார். இந்த போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .
அதேபோல் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தின் இரண்டாவது வருட புதிய போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி நடித்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களின் ஒரு வருடம் மற்றும் இரண்டாவது வருட நினைவுகளை அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர்.
அசுரன் வெளியாகி ஒரு வருடம் நிறைவுறும் நிலையில், #1YearofBBAsuran CDP வெளியிடுவதில் பெருமை. வெற்றிக்கு வித்திட்ட @VetriMaaran @dhanushkraja மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் நெகிழ்வில்,மகிழ்வில்..@gvprakash @ManjuWarrier4 @VelrajR pic.twitter.com/eWviYSzp8S
— Kalaippuli S Thanu (@theVcreations) October 3, 2020
#2Yearsof96 #2YearsofClassic96 #2YearsofRamJaanu
— Think Music (@thinkmusicindia) October 3, 2020
Celebrating ?? 2️⃣ Years of Classic #96TheMovie Today !
Enjoy the album of #96Movie here https://t.co/UrbVy76Bh8#PremKumar @VijaySethuOffl @trishtrashers @govind_vasantha @MadrasEnterpriz @gopiprasannaa @7screenstudio pic.twitter.com/WiHDFbwWbd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments