சிம்புவின் 'பத்து தல' படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே. கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ’பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பிரியாபவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்பதும், இவர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க இருப்பதை சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது ’பத்து தல’ படத்தில் தனுஷின் ‘அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். ‘அசுரன்’ படத்தில் வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்த தீஜே அருணாச்சலம் என்பவர் தற்போது ’பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இன்று அவருக்கு பிறந்த நாளை அடுத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அவருடைய போஸ்டர் ஒன்றும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது