'விடுதலை 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? வெற்றிமாறனின் தரமான சம்பவம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 25 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’விடுதலை’ இரண்டாம் பாகத்தை பொருத்தவரை விஜய் சேதுபதி காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வெற்றிமாறனின் ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார் என்பதும், அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் போற்றப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறன் படத்தில் மஞ்சுவாரியர் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தில் வெற்றிமாறன் மஞ்சுவாரியாரை வைத்து தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் விரைவில் மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.