நயன்தாரா திருமணம் எப்போது? உலகக்கோப்பையை கணித்த ஜோதிடர் கருத்து!

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தற்போது நயன்தாரா திருமணம் குறித்தும் கணித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்றும், நியூசிலாந்து, இங்கிலாந்து இறுதி போட்டியில் மோதும் என்றும், நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும், வில்லியம்சன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருந்தார். இவரது கணிப்பு கோப்பையை வென்ற அணியை தவிர மற்றவை சரியாக இருந்தது.

இந்த நிலையில் இதே ஜோதிடர் தற்போது நயன்தாராவின் திருமணம் எப்போது என்பதை கணித்துள்ளார். நயன்தாராவின் ஜாதகம் மற்றும் தனது கணிப்பின்படி அவரது திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அவர் கணித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, விரைவில் அவரை திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜோதிடரின் இந்த கணிப்பும் சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நயன்தாரா தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.